Nov 12, 2026
Thisaigal NewsYouTube

200 ரிங்கிட் பணத்திற்காகக் கொலை – இருவருக்கு 35 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
200 ரிங்கிட் பணத்திற்காகக் கொலை – இருவருக்கு 35 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள்

பேராக், மஞ்சோங்கில், 200 ரிங்கிட் பணத்திற்காக ஒருவரைக் கொலை செய்த இரு ஆடவர்களுக்கு விதிக்கப்பட்ட 35 ஆண்டுகள் சிறைத்தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

38 வயது எஸ். சந்தானம், 37 வயது ஆர். ரமேஷ் ஆகிய இருவரும், 2018ஆம் ஆண்டு அக்டோபரில் மஞ்சோங், செகாரி என்ற இடத்தில் கைவிடப்பட்ட சிமெண்ட் தொழிற்சாலையில் 48 வயது கே. முத்துக்குமார் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் விற்பனையில் ஏற்பட்ட 200 ரிங்கிட் பணப் பற்றாக்குறையே இந்தக் கொலைக்குக் காரணம் என விசாரணையில் தெரிய வந்தது. முத்துக்குமாரைக் கட்டிப் போட்டு தாக்கியதுடன், வயிற்றுப் பகுதியில் 21 முறை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் இருவருக்கும் விதிக்கப்பட்ட 35 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், தலா 12 பிரம்படிகளையும் கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்தது. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அவர்களின் இறுதி மேல்முறையீட்டை ஒருமனதாக நிராகரித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாத வருமானம் 4,000 ரிங்கிட்டை எட்டினால் ஜி.எஸ்.டி. வரி குறித்து பரிசீலிக்கலாம் – பிரதமர் அன்வார்

மாத வருமானம் 4,000 ரிங்கிட்டை எட்டினால் ஜி.எஸ்.டி. வரி குறித்து பரிசீலிக்கலாம் – பிரதமர் அன்வார்

பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை – அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை – அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

ஆற்றில் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு! 48 மணி நேரத்திற்கும் மேலாகியிருக்கலாம் – போலீஸ் சந்தேகம்

ஆற்றில் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு! 48 மணி நேரத்திற்கும் மேலாகியிருக்கலாம் – போலீஸ் சந்தேகம்

கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து கோத்தா பாரு செல்ல இனி 4 மணி நேரம்! டிசம்பர் 12 முதல் இசிஆர்எல் ரயில் சேவை தொடக்கம்

கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து கோத்தா பாரு செல்ல இனி 4 மணி நேரம்! டிசம்பர் 12 முதல் இசிஆர்எல் ரயில் சேவை தொடக்கம்

வீட்டுக் காவல் நிபந்தனைகளை மீறினால் நஜிப் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் – உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

வீட்டுக் காவல் நிபந்தனைகளை மீறினால் நஜிப் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் – உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

அன்வாரின் தலைமை மீது நம்பிக்கை இல்லையா? துணைப்பிரதமர் பதவியிலிருந்து விலகுங்கள் – ஜசெக தலைவர் கோபிந்த் சிங் அதிரடி

அன்வாரின் தலைமை மீது நம்பிக்கை இல்லையா? துணைப்பிரதமர் பதவியிலிருந்து விலகுங்கள் – ஜசெக தலைவர் கோபிந்த் சிங் அதிரடி