பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையில் தமக்கு தொடர்ந்து நம்பிக்கை இருப்பதாகத் துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பாரிசான் நேஷனல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டிய எந்தவோர் அவசியமும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், ஜசெக. பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கைப் பின்பற்றி, அக்கட்சியின் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றும் ஸாஹிட் கூறியுள்ளார்.
அன்வாரின் தலைமையில் நம்பிக்கை இல்லையென ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ கருதினால், ஜசெக. அமைச்சர்களே பதவி விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு மாநில அளவில் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், மத்திய அரசாங்கத்தில் அன்வாரின் தலைமையை பாரிசான் நேஷனல் தொடர்ந்து ஆதரிப்பதாகவும் ஸாஹிட் தெளிவுபடுத்தினார்.
அமைச்சரவைக் கூட்டங்களில் அரசாங்கக் கொள்கைகளுக்கோ பிரதமரின் தலைமையிலோ பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்றும் அவர் கூறினார்.








