கிழக்குக் கரை மக்களின் நீண்டகாலப் பயணச் சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கிழக்குக் கரை ரயில் இணைப்புத் திட்டமான இசிஆர்எல், வரும் டிசம்பர் 12ஆம் தேதி தனது சேவையைத் தொடங்கவுள்ளது.
இதன் மூலம் சிலாங்கூர் கோம்பாக்கிலிருந்து கிளந்தான், கோத்தா பாருவை சுமார் நான்கு மணி நேரத்தில் சென்றடைய முடியும். தற்போது தனியார் வாகனங்களில் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது.
இந்த ரயிலில் விசாலமான இருக்கைகள், யுஎஸ்பி மற்றும் மின்சார சார்ஜிங் வசதிகள், வைஃபை, உணவகம், தொழுகை அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், மணிக்கு 150 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் பயணிகளின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கோத்தா திரெங்கானுவை மூன்று மணி நேரத்திலும், கிளந்தான், கோத்தா பாருவை நான்கு மணி நேரத்திலும் சென்றடைய முடியும் என்பதால், கிழக்குக் கரை மக்களின் பயண அனுபவத்தில் இசிஆர்எல் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.








