முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக், வீட்டுக் காவலுக்கான நிபந்தனைகளை மீறினால் உடனடியாக மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் எச்சரித்துள்ளார்.
வீட்டுக் காவல் உத்தரவில் வசிப்பிடம், நடமாட்டம், சந்திப்புகள், தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக நான்கு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், நஜிப் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தத் திட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்றார்.
நிபந்தனைகள் மீறப்பட்டால் வீட்டுக் காவல் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, நஜிப் காஜாங் சிறைக்கோ அல்லது அதிகாரிகள் தீர்மானிக்கும் வேறு சிறைக்கோ மீண்டும் அனுப்பப்படுவார் என்றும் டத்தோ ஸ்ரீ சைபுடின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.








