Nov 12, 2026
Thisaigal NewsYouTube

அன்வாரின் தலைமை மீது நம்பிக்கை இல்லையா? துணைப்பிரதமர் பதவியிலிருந்து விலகுங்கள் – ஜசெக தலைவர் கோபிந்த் சிங் அதிரடி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அன்வாரின் தலைமை மீது நம்பிக்கை இல்லையா? துணைப்பிரதமர் பதவியிலிருந்து விலகுங்கள் – ஜசெக தலைவர் கோபிந்த் சிங் அதிரடி

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமை மீது நம்பிக்கை இல்லையென்றால், துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹாமிடி பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற ஸாஹிட்டின் கருத்து ஏற்புடையதல்ல என்றும், அதற்கான அதிகாரம் பிரதமர் அன்வாரிடமே இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அன்வாரின் தலைமையை அம்னோவும் பாரிசான் நேஷனலும் ஏற்க முடியாவிட்டால், பிரதமருக்கு நெருக்கடி கொடுக்காமல் பதவி விலகலாம் என்றும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

மேலும், அமைச்சரவை சிறப்பாகச் செயல்படுவதாகவும், சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் நிலையாக இருப்பதுடன், முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நாடாக மலேசியா தொடர்ந்து விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் பிரதமரின் பதவிக்கும் அதிகாரத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும், அமைச்சர்களின் நியமனம் பிரதமரின் முடிவைப் பொறுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் தேசிய செயற்கை நுண்ணறிவுத் தயார்நிலை வார நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கோபிந்த் சிங் இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாத வருமானம் 4,000 ரிங்கிட்டை எட்டினால் ஜி.எஸ்.டி. வரி குறித்து பரிசீலிக்கலாம் – பிரதமர் அன்வார்

மாத வருமானம் 4,000 ரிங்கிட்டை எட்டினால் ஜி.எஸ்.டி. வரி குறித்து பரிசீலிக்கலாம் – பிரதமர் அன்வார்

பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை – அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை – அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

ஆற்றில் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு! 48 மணி நேரத்திற்கும் மேலாகியிருக்கலாம் – போலீஸ் சந்தேகம்

ஆற்றில் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு! 48 மணி நேரத்திற்கும் மேலாகியிருக்கலாம் – போலீஸ் சந்தேகம்

கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து கோத்தா பாரு செல்ல இனி 4 மணி நேரம்! டிசம்பர் 12 முதல் இசிஆர்எல் ரயில் சேவை தொடக்கம்

கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து கோத்தா பாரு செல்ல இனி 4 மணி நேரம்! டிசம்பர் 12 முதல் இசிஆர்எல் ரயில் சேவை தொடக்கம்

வீட்டுக் காவல் நிபந்தனைகளை மீறினால் நஜிப் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் – உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

வீட்டுக் காவல் நிபந்தனைகளை மீறினால் நஜிப் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் – உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

200 ரிங்கிட் பணத்திற்காகக் கொலை – இருவருக்கு 35 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள்

200 ரிங்கிட் பணத்திற்காகக் கொலை – இருவருக்கு 35 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள்