May 22, 2026
Thisaigal NewsYouTube
கைது செய்யப்பட்ட 50 வயது வேன் ஓட்டுநர் விடுதலை
தற்போதைய செய்திகள்

கைது செய்யப்பட்ட 50 வயது வேன் ஓட்டுநர் விடுதலை

Share:

பாசிர் குடாங், ஜூன் 20-

பாலர்பள்ளி மாணவி ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, நேற்று கைது செய்யப்பட்ட 50 வயது பள்ளி வேன் ஓட்டுநர் ஒருவரை போலீசார் விடுதலை செய்தனர்.

சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 -யின் கீழ் விசாரணைக்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு இன்று போலீசாரின் தடுப்பு காவலிலிருந்து விடுவிக்கப்பட்டதாக செரி அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கும் நோக்கத்திற்காக போதுமான தகவல்களை போலீசார் சேகரித்து வருவதாக முகமட் சோஹைமி அறிவித்தார்.

முன்னதாக, ஜொகூர், பண்டார் செரி அலாம், ஜாலான் சூரியா -வில் உள்ள ஒரு வீட்டின் முன்புறத்தில் பள்ளி வேன் ஒன்று மோதியதில் ஐந்து வயது மாணவி ஒருவர் உயிரிழந்ததாக ஊடகங்கள் கூறியிருந்தன.

Related News