Oct 2, 2026
Thisaigal NewsYouTube

மனைவியைத் துரத்தி காரால் மோதிய கணவன்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மனைவியைத் துரத்தி காரால் மோதிய கணவன்!

கோலாலம்பூர், டிசம்பர்.07-

பந்தாய் டாலாமில் உள்ள ஜாலான் கம்போங் பாசீர் பகுதியில், ஒரு கணவன் தனது மனைவியைத் துரத்திச் சென்று அவரது காரை மோதிய சம்பவம் குறித்துக் கோலாலம்பூர் போக்குவரத்துக் காவற்படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சண்டை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய 26 வயதுடைய அந்த ஆசிரியை, தனது அண்ணனுடன் மெர்சடிஸ் காரில் சென்று கொண்டிருந்த போது, அவரது கணவர் ஓட்டிச் சென்ற புரோட்டோன் X50 காரை இடித்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலின் விளைவாக மெர்சடிஸ் கார் சேதமடைந்தாலும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கோலாலம்பூர் போக்குவரத்துக் காவல் தலைவர் முகமட் ஸம்ஸுரி முகமட் இசா உறுதிப்படுத்தினார். வீட்டில் வைத்து கணவர் தாக்கியதிலிருந்து தப்பிப்பதற்காகவே அந்த ஆசிரியை தனது அண்ணன் உதவியுடன் காரில் ஏறிச் சென்றதாகவும், இது தொடர்பான விசாரணையைத் தொடர சாட்சிகளைத் தேடுவதாகவும் காவற்படை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →