Oct 18, 2026
Thisaigal NewsYouTube

குழந்தை உட்பட ஐவர் கருகி மாண்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குழந்தை உட்பட ஐவர் கருகி மாண்டனர்

கோத்தா கினபாலு, செப்டம்பர் 30-

சபா, லிகாஸ், லோரோங் புருங் கெலெட்டோ, ஜாலான் லெம்பகா பாடி என்ற இடத்தில் குடிசை வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் ஒரு குழந்தை உட்பட ஐவர் கருகி மாண்டனர்.

இத்துயரச் சம்பவம் இன்று மதியம் 12.40 மணியளவில் நிகழ்ந்தது. இதில் ஒரு வயது குழந்தை, மூன்று சிறார்கள் மற்றும் மற்றும் 14 வயது வயது பெண் ஒருவர் ஆகியோர் மாண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த பலகை வீட்டில் தீ நாலாபுறமும் சூழ்ந்துக்கொண்ட வேளையில் தீயின் ஜுவாலை மத்தியில் தப்பிக்க இயலாமல் ஐவரும் கருகி மாண்டதாக கோத்தா கினாபலு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி காசிம் மூடா தெரிவித்தார்.

ஐவரின் உடல்களும் வீட்டின் குளியல் அறையிலிருந்து மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →