கோத்தா கினபாலு, அக்டோபர்.04-
சபா சட்டமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான ஆருடம் தற்போது வலுவடைந்து வருகிறது. சட்டமன்றம் எப்போது கலைக்கப்படும் என்று பலதரப்பட்ட ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன.
வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திங்கட்கிழமை சபா சட்டமன்றம் கலைக்கப்படக்கூடும் என்று ஆருடம் கூறப்பட்டாலும் அதற்கு அப்பாற்பட்ட தேதிகளும் கூறப்பட்டு வருகின்றன. சபா மாநிலத்தில் மூத்த அரசியல்வாதி கூறுகையில் அக்டோபர் 6 ஆம் தேதி சட்டமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கோடி காட்டியுள்ளார்.
எனினும் சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் அலுவலகத்தின் ஊடகவியல் தொடர்புப் பேச்சாளர் ஒருவர் கூறுகையில் பொருத்தமான நேரத்தில் அது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றார்.








