கோலாலம்பூர், செப்டம்பர்.19-
நாளை சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் 2026 ம லேசியாவிற்கு வருகை தரும் ஆண்டை முன்னிட்டு சாரோங் மியூசிக் ரன் 2025 எனும் இசைப் பயண நிகழ்வையொட்டி பத்து சாலைகள் மூடப்படுகின்றன.
பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர் கேஎல்சிசியில் தொடங்கும் இந்த நிகழ்வில் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற்பகல் 3 மணி முதல் பத்து சாலைகளும் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் உசோஃப் ஜான் முகமட் தெரிவித்துள்ளார்.








