Oct 15, 2026
Thisaigal NewsYouTube

அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒரு தலைவர் ஹடி அவாங்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், ஜன.16-


மலேசியாவிற்கு பிரதமாக தலைமையேற்பதற்கு அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒரு தலைவராக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி அவாங் , பார்க்கப்படுகிறார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.

தகுதி, தோற்றம், பேச்சு உட்பட அனைத்து அம்சங்களிலும் ஒரு தலைவருக்கே உள்ள இயல்பான தகுதிபாடுகளை கொண்டுள்ள ஹடி அவாங், நாட்டின் பிரமராகுவதற்கு மக்கள் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் உலாமா உச்சமன்ற உறுப்பினர் மொக்தார் செனிக் கேட்டுக்கொண்டார்.

ஹடி அவாங்கை, மதவாதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தலைவராக பார்க்காமல் தற்போதையை யதார்த்தத்தை அடிப்படையாக கொண்டு, அந்த உன்னத தலைவர் நோக்கப்பட வேண்டும்.

ஹலாலுக்கும், ஹராமுக்கும் இடையிலான எல்லையை அடையாளம் காணவும், அதேவேளையில் அது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அறிவும், இறையச்சமும் கொண்டிருக்கின்ற ஒருவர், தலைவராக இருப்பதற்கான மிக முக்கியமான பண்பாகும் என்று அந்த மதவாத கட்சியைச் சேர்ந்த மொக்தார் செனிக் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →