Nov 18, 2026
Thisaigal NewsYouTube

ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

பேராக்கில் பிறந்து, ஐந்து மலேசியக் குடிமக்களுக்குத் தந்தையான 39 வயது வேல்முருகனுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கக் கோரிய மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டத்தோ அஸாஹாரி கமால் ரம்லி தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு, அவரது தாயார் பாலம்மா, மலேசியக் குடிமகள் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், வேல்முருகன் வேறொரு நாட்டின் குடிமகனாகப் பிறக்கவில்லை என்பதையும் நிரூபிக்கத் தவறிவிட்டார் என்றும் தீர்ப்பளித்தது.

கடந்த 1987-ஆம் ஆண்டு பேராக், தஞ்சோங் மாலிம், உலு பெர்னாமில் உள்ள எஸ்காட் தோட்டத்தில் பிறந்த வேல்முருகனின் பிறப்பு, அவருக்கு 24 வயதான 2011-ஆம் ஆண்டில்தான் பதிவு செய்யப்பட்டது. தேசியப் பதிவுத் துறை அவரது குடியுரிமை நிலையைத் தெரியாதது எனப் பதிவு செய்திருந்தது. அவரது தாயாரின் குடியுரிமை நிலையும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தாயார் மலேசியாவில் பிறந்தாரா என்பது உள்ளிட்ட விவரங்களில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் முரண்பட்டதாக நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. மேலும், அவரது பெற்றோர் அவர் பிறந்தபோது சட்டப்படி திருமணம் செய்திருந்தார்களா என்பதற்கும் ஆதாரம் இல்லை எனக் குறிப்பிட்டது.

மலேசியாவில் பிறந்து வாழ்ந்ததையும், நல்லொழுக்கமுள்ளவர் என்பதையும் மட்டும் வைத்து குடியுரிமை வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. குடியுரிமை தொடர்பான அனைத்து முடிவுகளும் கூட்டரசு அரசியலமைப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்றும், இயல்புரிமை மூலம் குடியுரிமை பெறுவதற்கு மத்திய அரசிடம் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துப்பாக்கி ஏந்தி இலக்கை நோக்கிக் குறிவைத்த 30 ஊடகவியலாளர்கள்! – கெடா காவல்துறையுடன் இணைந்து துப்பாக்கிச் சுடும் பயிற்சி!

துப்பாக்கி ஏந்தி இலக்கை நோக்கிக் குறிவைத்த 30 ஊடகவியலாளர்கள்! – கெடா காவல்துறையுடன் இணைந்து துப்பாக்கிச் சுடும் பயிற்சி!

சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் வெள்ளம் தீவிரம் – ஆயிரக்கணக்கானோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் வெள்ளம் தீவிரம் – ஆயிரக்கணக்கானோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

மனிதக் கடத்தல் வழக்கில் ஒரே குடும்பத்தினர் மூவர் மீது 16 குற்றச்சாட்டுகள்

மனிதக் கடத்தல் வழக்கில் ஒரே குடும்பத்தினர் மூவர் மீது 16 குற்றச்சாட்டுகள்

'கென்சிங்' கருத்துக்கு அன்வாரிடம் அகமட் மஸ்லான் மன்னிப்புக் கோரினார்

'கென்சிங்' கருத்துக்கு அன்வாரிடம் அகமட் மஸ்லான் மன்னிப்புக் கோரினார்

எஸ்எம்இ கோர்ப் மூலம் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 90 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதி – அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

எஸ்எம்இ கோர்ப் மூலம் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 90 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதி – அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

உலகின் மிகச் சிறந்த வீதிகள் பட்டியலில் பினாங்கின் லெபோ பந்தாய்

உலகின் மிகச் சிறந்த வீதிகள் பட்டியலில் பினாங்கின் லெபோ பந்தாய்