Oct 26, 2026
Thisaigal NewsYouTube

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

66 ஆண்டுகளாகக் காத்திருந்த கம்போங் உஜோங் பத்து மக்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இத்திட்டத்திற்காக, பினாங்கு மாநில வீடமைப்பு வாரியமான LPNPP மற்றும் Paramount Property (Butterworth) Sdn. Bhd. இடையே மேம்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானத்தாக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 268 வீட்டு உரிமையாளர்கள் இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ளனர். தகுதியானவர்களுக்கு 750 சதுர அடி இலவச வீடு, நிபந்தனைகளுக்கு உட்பட்ட வாடகை-கொள்முதல் திட்டம் மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு வாகன நிறுத்துமிடம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், முதல் கட்டத் திட்டம் நிறைவடையும் வரை, ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மாதம் RM700 தற்காலிக வாடகை உதவி வழங்குவதற்கும் மேம்பாட்டாளர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் இதனைத் தமது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றின் முக்கிய முன்னேற்றமாகக் குறிப்பிட்டதுடன், மக்களின் உரிமைகள், நலன்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் தொடர்ந்து கண்காணிப்பதாக உறுதியளித்தார் குமரன்.

நேற்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோ பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் , வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு உள்ளிட்டோர் தொடர்புடைய முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கினர்.

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு, உஜோங் பத்து மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உருவாக்கும் நோக்கில் இது ஒரு முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுவத்தாக குமரன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →