Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தாயாரை கொன்று ஐஸ் பெட்டிக்குள் வைத்த சம்பவம்: சவப்பரிசோதனை இன்னமும் நடைபெறுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தாயாரை கொன்று ஐஸ் பெட்டிக்குள் வைத்த சம்பவம்: சவப்பரிசோதனை இன்னமும் நடைபெறுகிறது

கோலாலம்பூர், நவ. 15-


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தனது சொந்த தாயாரை கொன்று ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்ட சம்பவத்தில் மீட்கப்பட்ட அந்த மூதாட்டியின் சடலம், மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையின் சவக்கிடங்கில் இன்னமும் சவப்பரிசோதனை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அந்த மூதாட்யின் 53 வயது மகன், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மாஷரிமான் கூ மாமூட் தெரிவித்தார்.

மூதாட்டியின் சடலம், ஐஸ் பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட கோலாலம்பூர், Taman OUG-யில் உள்ள அந்த ஆடவரின் வீட்டில் நேற்று மாலை 4.00 மணியளவில் போலீசார் மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர்.

இரண்டு மாடிகளை கொண்ட அந்த தரை வீட்டில் இக்கொலைக்கான வேறு ஆதாரங்கள் எதுவும் சிக்கி உள்ளனவா? என்பதைக் கண்டறியும் பொருட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.

80 வயது தனது தாயாரை அந்த நபர், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்து, வீட்டில் உள்ள ஐஸ் பெட்டியில் வைத்திருந்தாக கடந்த செவ்வாய்க்கிழமை, போலீசுக்கு தகவல் அளித்தார்.

அவரின் வீட்டிற்கு விரைந்த போலீஸ் குழு, வீட்டில் உள்ள ஐஸ் பெட்டியில் அந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டனர். ஐஸ் அருகிலேயே நின்றிருந்த அந்த நபரையும் கைது செய்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →