புத்ராஜெயா, நவம்பர்.09-
மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சு, செழுமையான குடும்பத்தை உருவாக்குவதில் தந்தையின் பங்கை வலுப்படுத்துவதற்காக, KASIH MADANI 2.0 தொகுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள Modul Kebapaan, குடும்பத் தலைவர்களாகத் தந்தையின் பொறுப்புகளைப் புரிந்து கொண்டு, இல்லற நலனுக்கான கடமைகளைப் பகிர்ந்து கொள்ள அவர்களை ஊக்குவிக்கிறது.
மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்கும் பங்கு தாய்க்கு மட்டும் உரியதல்ல, தந்தையும் முன்னுதாரணத் தலைவராகவும், குடும்பத்தின் அன்றாட வாழ்வில் தீவிரப் பங்களிப்பாளராகவும் இருக்க வேண்டும் என்று அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி வலியுறுத்தினார். கணவன் மனைவி இருவரும் தங்கள் பொறுப்புகளைச் சமன் செய்வதைப் பற்றியதே அன்றி, கடமைகளைப் பரிமாறிக் கொள்வது பற்றியதல்ல என்றும், கணவருக்குச் சிறப்புப் பயிற்சிகள், கருத்தரிப்புச் சிகிச்சை குறித்த விழிப்புணர்வும் இத்திட்டத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








