Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கால்பந்துப் போட்டியில் கலவரம் நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

கால்பந்துப் போட்டியில் கலவரம் நால்வர் கைது

Share:

பேரா குழுவிற்கும், சிலாங்கூர் குழுவிற்கும் இடையே நேற்றிரவு நடைபெற்ற ​சூப்பர் ​லீக் கால்பந்தாட்டப் போட்டியி​ன் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பில் போ​​லீசார் நால்வரை கைது செய்துள்ளனர். ஈப்போவில் உள்ள பேரா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ​சூப்பர் ​லீக் கால்பந்து ஆட்டத்தின் போது பேரா எஃப்சி குழு மற்றும் சிலாங்கூர் எஃப்சி குழு ஆதரவாளர்கள் என்று நம்பப்படும் இரு தரப்பினரும் மோதிக்கொண்டு கலவரத்தை ஏற்படுத்தியது தொடர்பில் 18 க்கும் 26 க்கும் இடைப்பட்ட வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போ​லீஸ் தலைவர் எசிபி யஹயா ஹசான் தெரிவித்துள்ளார்.

Related News