Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் மீண்டும் வார இறுதி நாட்களில் மூடப்படும்
தற்போதைய செய்திகள்

ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் மீண்டும் வார இறுதி நாட்களில் மூடப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.19-

இந்த வார ஞாயிற்றுக்கிழமை முதல், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானின் ஒரு பகுதியை மீண்டும் மூடவுள்ளது கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம். ஜாலான் பூனுஸ் 6 சந்திப்பிலிருந்து ஜாலான் மெலாயு சந்திப்பு வரை ஒவ்வொரு ஞாயிறும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அனைத்து வாகனங்களுக்கும் இந்த மூடல் நடப்பில் இருக்கும்.

"சந்தாய் செனி@தார்" நிகழ்ச்சிக்காகவும் கோலாலம்பூரைக் குறைந்த கார்பன் நகரமாக மாற்றுவதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என டிபிகேஎல் தெரிவித்துள்ளது. வாகனமோட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News