பெட்டாலிங் ஜெயா, நவம்பர்.04-
ரெபிட் கேஎல் இரயில் ஒன்று தீப்பற்றி எரிவது போல் நேற்று சமூக ஊடகங்களில் பரவிய காணொளி போலியானது என்று பொதுப் போக்குவரத்து சேவைகளை நிர்வகிக்கும் நிறுவனமான பிராசாரானா மலேசியா பெர்ஹாட் விளக்கமளித்துள்ளது.
அம்பாங் எல்ஆர்டி வழித்தடத்தில் செல்லும் இரயில் ஒன்று, தீப் பற்றியதாகக் கூறப்பட்ட அக்காணொளி, டிக் டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவியதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
இந்நிலையில், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள பிராசாரானா, அனைத்து இரயில் சேவைகளும் எந்த ஓர் இடையூறும் இன்றி, வழக்கமாகச் செயல்பட்டு வருவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது போன்ற போலி காணொளிகளைப் பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிராசாரானா எச்சரித்துள்ளது.








