கோலாலம்பூர், செப்டம்பர்.11-
இஸ்ரேலின் பைத்தியக்காரத்தனம் மற்றும் ஆணவத்திற்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு, கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
காசா மற்றும் பிற நாடுகளில் இஸ்ரேல் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக உலக நாடுகள் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் அன்வார் கவலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலிய சியோனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பு, காலனித்துவம், ஆணவ வெளிப்பாடு மற்றும் சர்வதேச சட்டங்களைக் கண்டுக் கொள்ளாமல் இருப்பது போன்ற செயல்பாடுகளுக்கு எதிராக வலுவான கொள்கை ரீதியான கூட்டணியை முஸ்லிம் நாடுகள் அமைக்க வேண்டுமென்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.








