Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

2024 ஆம் ஆண்டு பட்ஜெட் சாமானிய மக்களின் சுமையை குறைக்கும் பிரதமர் அன்வார் உத்தரவாதம்

Share:

நாட்டின் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. 2024 ஆம் ஆண்டுக்கான இந்த வரவு செலவுத் திட்டம், ஏழை மற்றும் B40 தரப்பைச் சேர்ந்தவர்களின் சுமையை குறைக்க வல்லதாக இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

உதவித்தொகை குறைக்கப்பட்டதன் விளைவாக மக்களின் வாழ்க்கைச் செலவினம் அதிகரிக்கப்பட்டு இருப்பதை அரசாங்கம் உணர்ந்திருப்பதாக நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் சாமானிய மக்களை இலக்காக கொண்டு அவர்களின் பொருளாதார சுமையை குறைக்கக்கூடிய வரவு செலவுத் திட்டமாக 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அமைந்திருக்கும் என்று இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில அன்வார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News