Jan 22, 2026
Thisaigal NewsYouTube
பூட்டப்பட்ட வீட்டில்  உடலில் கடும் காயங்களுடன் 4 வயது இந்தியச் சிறுவன் மீட்கப்பட்டான்
தற்போதைய செய்திகள்

பூட்டப்பட்ட வீட்டில் உடலில் கடும் காயங்களுடன் 4 வயது இந்தியச் சிறுவன் மீட்கப்பட்டான்

Share:

கடும் சித்ரவதைக்கு ஆளாகி, பசியால் அவதியுற்று வந்ததாக நம்பப்படும் 4 வயது இந்திய சிறுவன், உடலில் கடும் காயங்களுடன் பூட்டப்பட்ட வீடு ஒன்றிலிருந்து போலீாசாரால் மீட்கப்பட்டுள்ளான். பசியால் துடித்துக்கொண்டு இருந்த அந்த சிறுவன் பூட்டப்பட்டிருந்த அந்த அடுக்குமாடி வீட்டின் இரும்புக்கேட்டின் வாயிலாக பொது மக்களிடம் உணவுக்கேட்டு கெஞ்சியதைத் தொடர்ந்து அந்த சிறுவனின் அவல நிலை தெரியவந்துள்ளது.

பொது மக்களின் உதவியுடன் அந்த சிறுவன் நேற்று மாலை 4.30 மணியளவில் ஈப்போ, தாமான் மெங்லெம்பு இம்பியானா அட்ரில்அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மீட்கப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யஹாயா ஹாசன் தெரிவித்தார்.

அந்த அடுக்கு மாடி வீட்டில் தனியொரு நபராக அடைத்து வைக்கப்பட்டு இருந்த அந்த சிறுவன் மீட்கப்பட்ட போது, உடலில் பட்டை பட்டையாக காயத் தழும்புகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அந்த சிறுவன் அடித்து துன்புறுத்தப்பட்டு, கடும் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும் ஏசிபி யஹாயா ஹாசன் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் அந்த சிறுவனின் சொந்த தாயார் என்று நம்பப்படும் 23 வயது பெண்ணும், அவரின் காதலன் என்று நம்பப்படும் 26 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்புப்பிரிவில் அந்த சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் இச்சம்பவம் குறித்து 2002 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை செய்து வருதவதாக ஏசிபி யஹாயா மேலும் கூறினார்.

Related News