மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற ஆட்சியாளர்கள் மன்றத்தின் 273ஆவது கூட்டத்துக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
ஜோகூர் இடைக்கால சுல்தான் துவாங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில் இப்னி சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக, துங்கு தெமெங்கோங் ஜோகூர் துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் அல்-ஹாஜ் இப்னி சுல்தான் இப்ராஹிமும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
ஆட்சியாளர்கள் மன்றத்தின் 273ஆவது கூட்டம் நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்குப் பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா தலைமை தாங்குகிறார்.








