முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் ஒருவரையும் அவரது தாயாரையும், கோலாலம்பூரில் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமயத் துறையான ஜாவி (JAWI) கைது செய்துள்ளது.
இது தொடர்பாக சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையான ஜாயிஸ் (JAIS) இயக்குநர் ஷாஸிஹான் அஹ்மாட் கூறுகையில், கைது செய்யப்பட்ட இருவரிடமும் சிலாங்கூர் மாநிலச் சட்டங்களின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், விசாரணைக்கு உதவ குறைந்தது 14 பேரை அழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகளில் முஸ்லிம் ஒருவர், முஸ்லிம் அல்லாத சமயச் சடங்குகளில் பங்கேற்பதாகக் கூறப்படும் காட்சிகள் தொடர்பாக, சமயத் துறைகளும் போலீசும் விசாரணையை ஒருங்கிணைத்து வருகின்றன. விசாரணை முடியும் வரை பொதுமக்கள் ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஜாயிஸ் கேட்டுக் கொண்டுள்ளது.








