Oct 13, 2026
Thisaigal NewsYouTube

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் மூத்த அதிகாரி ஒருவர், 2017ஆம் ஆண்டு தனிநபர் ஒருவரிடமிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகச் சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ் இரண்டு தனித்தனி விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் இதனைத் தெரிவித்தார். அரசுப் பணியில் உள்ளவர் தனது அதிகாரப்பூர்வப் பணியுடன் தொடர்புடைய நபரிடமிருந்து ஆதாயம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகவும், அவதூறு மற்றும் இணையத் தொடர்புச் சேவைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாகவும் விசாரணை நடைபெறுகிறது.

இந்தக் குற்றச்சாட்டு ஏற்கெனவே 2018ஆம் ஆண்டு விசாரிக்கப்பட்டு, தவறு எதுவும் நிரூபிக்கப்படாததால் வழக்கு மூடப்பட்டதாக எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது. எனினும், குற்றச்சாட்டு மீண்டும் பரவியதைத் தொடர்ந்து, எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹாலிம் அமான் சிறப்புக் குழுவை அமைத்து மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஆட்சியாளர்கள் மன்றத்தின் முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஆட்சியாளர்கள் மன்றத்தின் முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு