Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆங்கில போதனையை வலியுறுத்தும்
தற்போதைய செய்திகள்

ஆங்கில போதனையை வலியுறுத்தும்

Share:

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கப்பபட வேண்டிய அவசியத்தை பினாங்கு மாநில அரசாங்கம் வலியுறுத்தும் என்று துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகள் அனைத்துக்கும் திறன் பெற்ற தொழிலாளர்களஇருப்பதை உறுதி செய்வதற்கு பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகியப் பாடங்களை ஆங்கிலத்தில் போாதிக்கப்பட வேண்டும் என்று பினாங்கு அரசு வலியுறுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

உயர் தொழில்நுட்பத்துறையில் ஆங்கில மொழியிலே பிரதானம் என்ற நிலை இருக்கும் பட்சத்தில் நமது பிள்ளைகள் ஆங்கிலத்திலிருந்து விடப்பட்டு விடக்கூடாது.

தொழில்நுட்பத் துறைகளுக்கு தேவையான இரு முக்கியப் பாடங்களான கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிப்பதற்கு முன்னுரிமை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படும் என்று ஜக்டீப் சிங் தெரிவித்துள்ளார்.

Related News