Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எந்த திரையரங்கம் மறுத்தது?
தற்போதைய செய்திகள்

எந்த திரையரங்கம் மறுத்தது?

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் கடந்த கால சரிவுகளையும், இன்றைய சாதனைகளையும் சித்தரிக்கும் “Anwar : The Untold Story” என்ற திரைப்படத்தைத் திரையிடுவதற்கு சில திரையரங்குகள் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு, ஏற்புடையது அல்ல என்று கூட்டரசு பிரதேச பெஜூவாங் கட்சியின் முன்னாள் தலைவர் கைருடீன் அபு ஹசான் தெரிவித்தார்.

உண்மையிலேயே அன்வாரின் திரைப்படைத்தை திரையிட மறுப்பு தெரிவித்து கீழறுப்பு செய்வதற்கு எந்தவொரு திரையரங்கிற்கும் துணிவு இல்லையென்று கைருடீன் குறிப்பிட்டார்.
Anwar : The Untold Story திரைப்படத்தைத் தயாரித்த குழுவினர், கூறியுள்ள குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. பிரதமராக இருக்கக்கூடிய ஒருவரின் திரைப்படைத்தை எந்தவொரு திரையரங்கும் புறக்கணிக்க முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Related News