நேபாள வெள்ளத்தில் காணாமல் போன மலேசியர்களை அடையாளம் காணும் பணிக்கு உதவ, மலேசிய ரசாயனத் துறையின் டி.என்.ஏ. நிபுணர்களை நேபாளத்திற்கு அனுப்பத் தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன மலேசியர்களின் நெருங்கிய உறவினர்கள் 52 பேரிடமிருந்து டி.என்.ஏ. மாதிரிகள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளதாகவும், அவை நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நேபாளத்தில் பேரிடரில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், டி.என்.ஏ. பொருத்தத்தை கண்டறியும் பணிக்கு நீண்ட காலம் தேவைப்படலாம் என்றும் முகமது ஹசான் தெரிவித்தார்.
இதனால், தேவை ஏற்பட்டால் மலேசிய ரசாயனத் துறை நிபுணர்கள் நேபாளத்திற்குச் சென்று, அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து டி.என்.ஏ. பரிசோதனை மற்றும் அடையாளம் காணும் பணியில் உதவுவார்கள் என்றார்.
மேலும், பேரிடரில் உயிரிழந்தவர்களை விரைவாக அடையாளம் காண உதவுவதற்காக, வேறு சில நாடுகளும் DNA நிபுணர்களை நேபாளத்திற்கு அனுப்பத் தயாராகி வருவதாக முகமட் ஹசான் குறிப்பிட்டார்.








