Sep 5, 2026
Thisaigal NewsYouTube
மாட்டா கண்காட்சியில் உள்நாட்டு சுற்றுலா விற்பனை 1.6 கோடி ரிங்கிட்டை எட்டியது
தற்போதைய செய்திகள்

மாட்டா கண்காட்சியில் உள்நாட்டு சுற்றுலா விற்பனை 1.6 கோடி ரிங்கிட்டை எட்டியது

Share:

மாட்டா சுற்றுலாக் கண்காட்சியில் இடம்பெறும் உள்நாட்டு சுற்றுலாப் பிரிவு, ஒவ்வொரு கண்காட்சியிலும் சுமார் 1 கோடியே 50 லட்சம் முதல் 1 கோடியே 60 லட்சம் ரிங்கிட் வரை விற்பனையைப் பதிவு செய்து வருவதாக மலேசிய சுற்றுலா முகவர்கள் மற்றும் பயண முகவர் சங்கத்தின் தலைவர் நைகல் வோங் தெரிவித்துள்ளார்.

மலேசியர்கள் வெளிநாடுகளுக்குப் பதிலாக உள்நாட்டிலேயே உள்ள சுற்றுலாத் தலங்களை அதிகம் நாடத் தொடங்கியிருப்பதை இது காட்டுவதாக அவர் கூறினார்.

மாட்டா கண்காட்சியின்  உள்நாட்டு அரங்கில் மலேசியாவின் பல்வேறு மாநிலங்களும் உள்ளூர் சுற்றுலா நிறுவனங்களும் பங்கேற்று, பல்வேறு பயணத் திட்டங்களையும் சலுகைகளையும் வழங்குகின்றன.

உள்நாட்டு சுற்றுலாவின் வளர்ச்சி, உள்ளூர் சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஈர்ப்புகளில் புதிய சிந்தனைகளையும் புத்தாக்கங்களையும் உருவாக்கி, அனைத்துலக சுற்றுலாவுக்கும் ஊக்கமளிக்கும் என நைகல் வோங் தெரிவித்தார்.

இதனிடையே, 2025ஆம் ஆண்டு மலேசியாவுக்கு 4 கோடியே 22 லட்சம் அனைத்துலகப்  பயணிகள் வந்துள்ளனர். இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் மட்டும் 2 கோடியே 12 லட்சம் அனைத்துலகப் வருகைகள் பதிவாகியுள்ளன.

Related News