Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சபாவில் சில மாவட்டங்களில் மின்சாரத்தடை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சபாவில் சில மாவட்டங்களில் மின்சாரத்தடை

கோத்தாகினபாலு, நவ.9-


சபா மாநிலத்தில் கிழக்குப்பகுதியில் சில மாவட்டங்களின் மின்சார விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக சபா மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சண்டக்கான், லஹாட் டத்து, குனாக், செம்பூர்ணா, பெலுரான் மற்றும் கினாபாத்தாங்கான் ஆகிய பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக சபா மின்சார வாரியம் தனது முகநூலில் தெரிவித்துள்ளது.

மின்சாரத் தடைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் அதனை சீர்படுத்துவதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. சீரமைப்புப்பணிள் நிறைவுப்பெற்றப்பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகம். கட்டம் கட்டமாக திரும்பும் என்பதையும் அந்த வாரியம் தெரிவித்துள்ளது.

மின்சாரத் தடை தொடர்பில் ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து தொடர்ந்து அறிவிக்கப்பட்ட வண்ணம் இருக்கும் என்று அது மேலும் உறுதி கூறியது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →