புத்ராஜெயா, அக்டோபர்.23-
பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா 4 இல் 16 வயது மாணவி, கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்களும், ஆசிரியர்களும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அவர்களுக்கு மனோரீதியாக தெம்பு ஊட்டுவதற்கு 50 மனோவியல் நல்லுரையாளர்கள் அப்பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் தெரிவித்தார்.
இந்தத் துயரச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற முறையில் மாணவர்களும், ஆசிரியர்களும் தற்போது பயந்த சுபாவத்தில் உள்ளனர். அவர்கள் அந்த அச்சத்திலிருந்து மீண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லுரைகள் வழங்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருவதாக ஃபட்லீனா சீடேக் விளக்கினார்.








