ந்வரி ஏய்ப்பு செய்து, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கான வெள்ளியை முதலீடு செய்துள்ள மலேசிய தலைவர்கள் குறித்து அம்பலப்படுத்தியுள்ள பண்டோரா ஆவணங்கள் தொடர்பில் ஆள்பார்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டை அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இன்று மறுத்துள்ளார்.
எஸ்.பி.ஆர்.எம். மிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டில் அடிப்படையில்லை என்று அஸாம் பாக்கி விளக்கினார். எஸ்.பி.ஆர்.எம் ஒரு சுதந்திரமான அமைப்பு. சில தலைவர்களின் பெயர்கள், பண்டோரோ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டாலும் விசாரணை நடத்துவதற்கு முன்னதாக, சில ஆதராங்களைத் திரட்ட வேண்டியுள்ளது என்று அஸாம் பாக்கி விளக்கம் அளித்துள்ளார்.
அம்னோ தலைவரும், துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் ஹமிடி, அனைத்துலக வாணிப, தொழில் துறை அமைச்சருமான தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் ஆகியோரின் பெயர்கள் பண்டோரா ஆவணங்களில் இடம் பெற்றுள்ள போதிலும், அவர்களை எஸ்.பி.ஆர்.எம், விசாரணைக்கு அழைக்காதது ஏன் என்று அரசியல் பொருளாதார நிபுணர் எட்மண்ட் டெரன்ஸ் கோம்ஸ் எழுப்பிய கேள்வித் தொடர்பில் அஸாம் பாக்கி எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்

துரோனோ அருகே பெட்ரோல் நிலையக் கழிவறையில் ஆடவர் சடலம்


