Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பிரதமரைச் சந்தித்ததில் நெகிழ்ந்து போனார் தேவகுமரன் கிருஷ்ணன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரதமரைச் சந்தித்ததில் நெகிழ்ந்து போனார் தேவகுமரன் கிருஷ்ணன்

கோலாலம்பூர், மே.28-

கோலாலம்பூரில் ஆசியான் உச்சநிலை மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில் ஆசியான் தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறிது நேரம் ஒதுக்கி ஊடகவியலாளர்களைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி கொண்டார் ஆர்.டி.எம். செய்தி ஒளிப்பதிவாளர் தேவகுமரன் கிருஷ்ணன்.

ஆசியான் மாநாடு குறித்து தொடர்ந்து செய்தி ஒளிப்பதிவில் ஈடுபட்டு வரும் தம்மை அணுகி, பிரதமர் , ஒளிப்பதிவு விஷயங்களைக் கேட்டது ஓர் இன்ப அதிர்ச்சி மட்டும் அல்ல, வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும் என்று ஆர்.டி.எம்மில் கடந்த 20 ஆண்டு காலமாக ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டு வரும் தேவகுமரன் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

பகாங்கில் பிறந்து வளர்ந்தவரான தேவகுமரன் கிருஷ்ணன் அடுத்த வாரத்தில் ஜோகூர் மாநிலத்திற்குப் பணியிடம் மாற்றலாகிச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

பிரதமரைச் சந்தித்ததில் நெகிழ்ந்து போனார் தேவகுமரன் கிருஷ்ணன் | Thisaigal News