Mar 18, 2026
Thisaigal NewsYouTube
முதல் வாரத்தில் பாடம் நடத்தப்படாது
தற்போதைய செய்திகள்

முதல் வாரத்தில் பாடம் நடத்தப்படாது

Share:

புத்ராஜெயா, மார்ச் 4 -

2024-2025 புதிய கல்வியாண்டு வரும் மார்ச் 10, 11 ஆம் தேதிகளில் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. பள்ளி வாழ்க்கையில் காலடிவைத்து வைக்கும் ஒன்றாம் ஆண்டு மாணவர்கள், இதர ஆண்டுகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி சூழலை குதூகலமாக உருவாக்கிக்கொள்வதற்கு முதல் வாரத்தில் பள்ளிப்பாடம் நடத்தப்படாது என்று கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்துள்ளார்.

முதல் வாரத்தில் மாணவர்களுக்கு பள்ளிப்பாடத்தில் கவனம் செலுத்துவதை விட பள்ளி நிர்வாகப் பணிகள், மாணவர்கள் அறிமுகம் மற்றும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று அஸ்மான் அட்னான் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை., இவ்வாண்டும் முதல் வாரத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News