Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்கள் கைதுசெய்யப்படுவர்
தற்போதைய செய்திகள்

அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்கள் கைதுசெய்யப்படுவர்

Share:

கடந்த மார்ச் 13 ஆம் தேதி, கோலக்கிள்ளான் துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியா, பிரிஸ்பேனுக்கு கொள்கலன் மூலம் 78 கோடியே 95 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 336 கிலோ எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், சமூக அந்தஸ்து மற்றும் தொழிலைப் பொருட்படுத்தாமல் அக்குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து, சரியான புலன் விசாரணயை மேற்கொள்வது மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா கூட்டரசு போலீசாருடன் இணைந்து செயல்படுமாறு மலேசிய அதிகாரிகளிடம் அது வலியுறுத்தியுள்ளது.

Related News