இம்மாதம் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தே வரையில் டெங்கிக் காய்ச்சலால் ஆறு பேர் மரணமடைந்துள்ளனர்.
அதற்கு முந்தைய வாரத்தில் டெங்கியால் எந்த மரணச் சம்பவமும் பதிவாவில்லை என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.
இவ்வாண்டு இதுவரையில் 96,443 டெங்கி சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகவும் அதில் 73 பேர் உயிடிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம் சிக்குன்குனியா நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டு இது வரையில் 177 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
பொது மக்களில் ஒரு சில இன்னமும் சுற்ற்ய்ப்புறத் தூய்மையில் கவனக் குறைவாக இருப்பதால் ஏடிஸ் கொசு இனப்பெருக்கம் செய்யும் சூழலை உருவாக்கி இருப்பதாக டாக்டர் முஹம்மது ரட்ஸி மேலும் கூறினார்.








