Sep 27, 2026
Thisaigal NewsYouTube
டீசல் வாகனங்களுக்கான சாலை வரி குறைப்பு – பிரதமர் அன்வார்  தகவல்
தற்போதைய செய்திகள்

டீசல் வாகனங்களுக்கான சாலை வரி குறைப்பு – பிரதமர் அன்வார் தகவல்

Share:

நாட்டில் டீசல் வாகனங்களுக்கான சாலை வரியைக் குறைப்பது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பினாங்கு பத்து காவானில் சாலை போக்குவரத்து இலாகாவான JPJ- வின் 80-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோஸ்ரீ அன்வார், உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் மக்கள் சந்திக்கும் சுமையைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்குடன் முதற்கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதற்கான சரியான வழிமுறைகள் மற்றும் அமலாக்கம் குறித்து போக்குவரத்து அமைச்சு தற்போது விரிவாக ஆய்வு செய்து வருகிறது.

விரைவில் இந்த வரி குறைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளைக் காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது மலேசியா முழுவதும் தனியார் கார்கள் உட்பட சுமார் 1.8 மில்லியன் டீசல் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன என்பதையும் பிரதமர் விளக்கினார்.

Related News