கோத்தா கினபாலு, செப்டம்பர்.02-
சபா, பாபாரில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியின் முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் இறப்பு தொடர்பான மரண விசாரணை நாளை புதன்கிழமை கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் தொடங்குகிறது.
மரண விசாரணை நீதிபதியாக செயல்படவிருக்கும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமீர் ஹசான் முன்னிலையில் நாளை செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கும் இந்த மரண விசாரணை நான்கு கட்டங்களாக 19 நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது.
அந்த மாணவியின் மரணம் தொடர்பில் 70 பேர் சாட்சியம் அளிக்கவிருக்கின்றனர்.








