Oct 9, 2026
Thisaigal NewsYouTube

நஜீப் வழக்கறிஞருக்கு எதிராகக் காரணம் கோரும் கடிதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜீப் வழக்கறிஞருக்கு எதிராகக் காரணம் கோரும் கடிதம்

கோலாலம்பூர், ஜூன்.27-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் பிரதான வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லாவிற்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் காரணம் கோரும் கடிதம் அனுப்பியுள்ளது.

ஷாஃபிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடுக்கக்கூடாது என்று காரணம் கேட்டு, சட்டத்துறை அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.

நஜீப் சம்பந்தப்பட்ட அரசாணை உத்தரவு தொடர்பில் ஜெர்மனியின் நாஸி படையினரைத் தொடர்புபடுத்தி ஷாஃபி அறிக்கை வெளியிட்டது தொடர்பில் அவருக்கு எதிராக காரணம் கோரும் கடிதத்தைச் சட்டத்துறை அனுப்பியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →