Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

டெண்டர் முன்மொழிவுக்கான கோரிக்கை வெளியீடு

Share:

பினாங்கு, ஜூலை 15-

பினாங்கு, பட்டர்வொர்த், செபராங் பேராய் உதரா,கம்போங் பாயா, ஜாலான் மெங்குவாங் – கில் வீற்றிருக்கும் டேவான் ஸ்ரீ மாரியம்மன் மண்டபத்தின் தரத்தை உயர்த்துதல், பழுது பார்த்தல், நிர்வகித்தல் மற்றும் வழிநடத்துதல் ஆகியவற்றுக்கான ஆப்பரேட்டர்கள் நியமனம் தொடர்பான டெண்டர் முன்மொழிவுக்கான கோரிக்கை விபர அறிக்கையை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்த டெண்டர், கடந்த ஜுலை முதல் தேதி திங்கட்கிழமை திறக்கப்பட்டு, ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

SSM-மில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ள மலேசிய இந்திய நிறுவனங்கள், RFP எனப்படும் முன்மொழிவுக்கான கோரிக்கை டெண்டரில் பங்கு கொள்வதற்கு ஆர்வம் இருக்குமானால், அந்த நிறுவனங்களுக்கு வரும் ஜுலை 17 ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு Dewan Sree Mariamman மண்டபத்தில் இரண்டாவது விளக்கமளிப்பு நடைபெறவிருக்கிறது..

இந்த விளக்கமளிப்பின் போது RFP பாரம் தலா 100 வெள்ளிக்கு விற்பனை செய்யப்படும். இந்த விளக்கமளிப்பில் பங்கு கொள்வதற்கு தங்களை பதிவு செய்து கொண்டுள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே RFP பாரம் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்படும் RFP பாரம், ஓர் கடித உரையில் வைக்கப்பட்டு, RFP Project என்று தலைப்பிட்டு, தெளிவாக எழுதி, அதன் குறிப்பு எண்ணை கடித உரையின் மேற்புறம் கோடியிட வேண்டும்.

பாரத்தை வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணிக்கு முன்னதாகவே No.225ஜாலான் மகாலிஸ்டர் , 10450 புலாவ் பினாங்கு என்ற முகவரியில் உள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தின் டெண்டர் பெட்டியில் சேர்த்து விட வேண்டும். அதற்கு பிறகு வருகின்ற RFP பாரங்கள் கவனிக்கப்படாது என்று அந்த அறவாரியம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேல்விபரங்களுக்கு கீழ் கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம்,
தொலைபேசி எண் 04-2262593 அல்லது மின் அஞ்சல்
[email protected]

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்