Jul 15, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

Share:

கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட கோர விபத்தில், ஒரு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

டிரெய்லர் லாரி ஒன்று அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த கார் மீது கவிழ்ந்ததில் அந்த கார் முற்றிலும் நசுங்கியது.

இந்த விபத்தில் காரிலிருந்த நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையில், 40 வயதான லாரி ஓட்டுநர், தலையிலும் இடுப்புப் பகுதியிலும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், அந்த லோரி ஓட்டுநர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் உறுதியானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News