Sep 25, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களில் பெர்சாமா தனித்துப் போட்டி: கூட்டணிகள் வேண்டாம் என்கிறார் ரபிசி
தற்போதைய செய்திகள்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களில் பெர்சாமா தனித்துப் போட்டி: கூட்டணிகள் வேண்டாம் என்கிறார் ரபிசி

Share:

வரவிருக்கும் ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில், பெர்சாமா கட்சியானது எந்த அரசியல் கூட்டணியுடனும் இணையாது என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி அறிவித்துள்ளார்.

கட்சியின் இந்த முடிவானது, கூட்டணி பேச்சுவார்த்தைகள் அல்லது அரசியல் சமரசங்களுக்கு கட்டுப்படாமல், தனது சொந்த தேர்தல் வியூகத்தை வழிவகுக்க வாய்ப்பளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசியல் சூழலில் வாக்காளர்கள் கூட்டணி அடிப்படையிலான அரசியலில் அதிகளவில் சோர்வடைந்து வரும் நிலையில், மக்கள் எதிர்பார்க்கும் சீர்திருத்தங்களை கூட்டணி அரசியல் வழங்கத் தவறி வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், தொடர்ந்து புதிய கூட்டணிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, தெளிவான கொள்கைகள், பொறுப்புணர்வு மற்றும் மக்கள் எதிர்பார்க்கும் சீர்திருத்தங்களை முன்னிறுத்தும் அரசியல் அணுகுமுறையே தேவை என ரபிசி வலியுறுத்தியுள்ளார்.

Related News