ஷா ஆலாம், அக்டோபர்.02-
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ஒரு கைக்குழந்தை உயிரிழந்தது, இதர எழுவர் காயமுற்றதற்குக் காரணமாக அமைந்த புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நிகழ்ந்த கோர விபத்து தொடர்பில் நிபுணர்களின் தொழில்நுட்ப அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. எனினும் அந்த அறிக்கை திருப்பித் தரப்பட்டு விட்டது. விபத்து தொடர்பில் மேலும் விபரங்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப அறிக்கையை சமர்ப்பிக்குமாறு போலீசார் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று டத்தோ ஷாஸெலி விளக்கினார்.








