Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நண்பரை கொன்று எரித்தாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

நண்பரை கொன்று எரித்தாக குற்றச்சாட்டு

Share:

காஜாங், ஜூலை 19-

தனது நண்பரை கொலை செய்து எரியூட்டியதாக மூன்று ஆடவர்கள் காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

44 வயது சுல்கர்னைன் முஹம்மட் ஆரிஃபின், 30 வயது முஹம்மது இக்பால் ஜைனல் மற்றும் 28 வயது சையத் ஃபிக்ரி பாரக்பா சையத் முகமது பக்ரி ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நபர்கள் ஆவர்.

இந்த மூவரும் கடந்த ஜுன் 22 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் சிலாங்கூர், ஜாலான் உலு லங்காட்டில் உள்ள ஒரு வீட்டில் 28 வயதுடைய முகமது அஃபிக் ஹம்தான் என்பவரை கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஆடவரின் உடல், எரியூட்டப்பட்ட நிலையில் செமினி, நீர்த்தேக்கம் அருகில் உள்ள ஒரு புதரில் கண்டு பிடிக்கப்பட்டது.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு