நிபோங் திபால், ஆகஸ்ட்.18-
போலீசாரின் உத்தரவையும் மீறி, ஒரு போலீஸ்காரரைக் கிட்டத்தட்ட மோதித் தள்ளும் அளவிற்கு அபாயகரமாக கனரக வாகனத்தைச் செலுத்தியதாக நம்பப்படும் ஒரு லோரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் பினாங்கு, நிபோங் திபால், ஜாலான் சுங்கை டாவுன் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இரவு 11.30 மணியளவில் ஜாவி டோல் சாவடிக்கு அருகில் போலீசார் மேற்கொண்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்ட போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக செபராங் பிறை செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஜேய் ஜனவரி சியோவோவ் தெரவித்தார்.
சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட டிப்பர் லோரி ஓட்டுநரைத் தடுத்து நிறுத்த போலீசார் முயற்சித்தனர். அப்போது சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரை அந்த நபர் மோதித் தள்ள முற்பட்டுள்ளார்.
செல்லத்தக்கச் சாலை வரி இல்லாத அந்த லோரியின் ஓட்டுநர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








