Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஷா அலாம் மாநகர் மன்ற உறுப்பினராக யோகேஸ்வரி சாமிநாதன் நியமனம்
தற்போதைய செய்திகள்

ஷா அலாம் மாநகர் மன்ற உறுப்பினராக யோகேஸ்வரி சாமிநாதன் நியமனம்

Share:

ஷா அலாம், ஜன.20 -

ஷா அலாம் மாநகர் மன்றத்தின் உறுப்பினராக ஜசெக.-வைச் சேர்ந்த யோகேஸ்வரி சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் 2024/2025 ஆம் ஆண்டு தவணைக் காலத்திற்கு மாநகர் மன்ற உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

தம்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து மிகப் பெரிய பொறுப்புக்கு நியமிக்கப்படுவதற்கு பரிந்துரை செய்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் வீரமான், ராயுடு வீரமான், பிரகாஷ் சம்புநாதன், கோபிந்த் சிங் டியோ உட்பட ஜசெக-வின் முக்கிய தலைவர்களுக்கு தமது நன்றியை பதிவு செய்வதாக யோகேஸ்வரி சாமிநாதன் தெரிவித்தார்.

தம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக இப்பொறுப்பினை ஏற்று நேர்மையுடனும், திறம்படனும், கடமையுணர்ச்சியுடன் சேவையாற்ற உறுதி பூண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் சவால் நிறைந்த இப்பொறுப்பினை ஏற்பதற்கு உறுதுணையாக இருந்த தமது கணவர் எஸ். நந்தகுமாருக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக யோகேஸ்வரி சாமிநாதன் தெரிவித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்