கோலாலம்பூர், நவம்பர்.12-
உயர்மட்ட அளவிலான அனைத்துலக நிகழ்வுகளுக்கான பாதுகாப்பை நிர்வகிக்கும் மலேசிய போலீஸ் படையின் திறன், அமெரிக்கா உட்பட உலகளாவிய முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இணையாக இருப்பதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் உட்பட அதிக ஆபத்துக்குரிய இடர்கள் நிறைந்த தலைவர்களின் பாதுகாப்பைக் கையாளுவதிலும், உறுதிச் செய்வதிலும் மலேசிய போலீஸ் படை, மாறுப்பட்ட செயல்திறன் மற்றும் தொழில்முறையைக் கொண்டிருந்தது, அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சைஃபுடின் குறிப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் வரவேற்கும் சூழலில் மலேசிய போலீஸ் படைக்கும், அமெரிக்காவின் பிரத்தியேகப் பாதுகாப்பு குழுவினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அணுக்கமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது என்று சைஃபுடின் வர்ணித்தார்.
எனினும் பாதுகாப்பு அம்சங்களை தீர்மானிப்பதில் மலேசிய போலீஸ் படையின் இறுதி அதிகாரமாக இருந்தது என்று தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவிற்கு இன்று அளித்த சிறப்புப் பேட்டியில் சைஃபுடின் தெரிவித்தார்.








