Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மேற்காசியாவின் பதட்டம் உடடினயாக தணிக்கப்பட வேண்டும் / பிரதமர் வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மேற்காசியாவின் பதட்டம் உடடினயாக தணிக்கப்பட வேண்டும் / பிரதமர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 02-

மேற்காசியாவில் நிலவி வரும் பதட்ட நிலை உடனடியாக தணிக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

பிராந்திய அளவிலான நிலைத்தன்மையை உறுதிசெய்வதற்கு அப்பகுதியில் நிலவி வரும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் அனைத்து தரப்பினரும் முனைப்புக்காட்ட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

லெபனான், சிரியா மற்றும் ஏமன் முதலிய நாடுகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்கள் யாவும் ,பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டு வரும் கொடூரமான இனப் படுகொலை செயல்களிலிருந்து உலக மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் ஒரு திட்டமிட்ட முயற்சியாகும் என்று பிரதமர் வர்ணித்தார்.

இஸ்ரேலின் தற்போதைய அரசியல் தலைவர்கள் தொடர்ந்த அதிகாரத்தில் இருப்பதை உறுதி செய்யவும், அவர்கள் தண்டனையின்றி தப்பிப்பதற்கும் ஒரு தனிநபரின் அரசியல் வாழ்வுக்காக ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் காவு கொடுக்கப்பட்டு வருவது இந்த பதட்டங்களின் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்பதை தெளிவாக காட்டுகிறத என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மேற்காசியாவின் பதட்டம் உடடினயாக தணிக்கப்பட வேண்டும் / பிர... | Thisaigal News