Oct 17, 2026
Thisaigal NewsYouTube

ஷா ஆலாம் அரங்கை உடைக்கும் பணி மே மாதம் நிறைவு பெறும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஷா ஆலாம் அரங்கை உடைக்கும் பணி மே மாதம் நிறைவு பெறும்

ஷா ஆலாம், நவ.9-


சிலாங்கூர் மாநிலத்தின் நில அடையாளத்தை தாங்கிய முக்கியப் பகுதிகளில் ஒன்றான ஷா ஆலாம் அரங்கை உடைக்கும் பணி அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவு பெறும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

ஷா ஆலாம் அரங்கை உடைக்கும் பணி கடந்த ஜுலை மாதம் முற்பகுதியில் தொடங்கியது. அந்த அரங்கை உடைக்கும் பணிகள் யாவும் தற்போது சமூக மாக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரே நேரத்தில் 60 ஆயிரம் அமரவும் 11ஆயிரம் பேர் நிற்கவும் வசதியைக்கொண்டிருந்த ஷா ஆலாம் அரங்கம், சுமார் 46 கோடி வெள்ளி செலவில் கடந்த 1994 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கடந்த ஜுலை 3 ஆம் தேதி மூடப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →