Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்
தற்போதைய செய்திகள்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

Share:

தேச நிந்தனைக் குற்றச்சாட்டில் 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, ரசாலி இத்ரிஸ் தொடர்ந்து கிஜால் மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிப்பார் என்றும் அவரது பதவி தானாகவே காலியாகாது என்றும் திரங்காணு மாநில சட்டமன்ற சபாநாயகர் நோர் ஹம்சா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் படி, 12 மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை அல்லது 2,000 ரிங்கிட்டிற்கும் கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டால் மட்டுமே ஒரு மக்கள் பிரதிநிதி தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் நீதிமன்றம் சரியாக 2,000 ரிங்கிட் அபராதம் மட்டுமே விதித்துள்ளது.

எனவே அரசியலமைப்பின் நேரடி விளக்கத்தின் அடிப்படையில் ரசாலி இத்ரிஸ் சட்டமன்ற உறுப்பினர் பதவி தொடர்கிறது என்றும் நோர் ஹம்சா தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தேச நிந்தனை கருத்து வெளியிட்டதாக குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த திரங்காணு மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ரசாலி இத்ரிஸ், நேற்று தனது தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்