Oct 3, 2026
Thisaigal NewsYouTube

பேராக் மாநில நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கருத்துகளுக்கு ஆரம்பத்திலேயே நடவடிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேராக் மாநில நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கருத்துகளுக்கு ஆரம்பத்திலேயே நடவடிக்கை

பேராக் மாநிலத்தில் அனைத்து இன மக்களிடையேயும் நிலவும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை தொடர்ந்து பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

பீடோர், டேவான் முஹிப்பாவில் நடைபெற்ற ஃபெஸ்டிவல் ஐடியா 2026 நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் இன உணர்வுகளைத் தூண்டும் கருத்துகள் பரப்பப்படுவதை புகார் கிடைக்கும் வரை காத்திருக்காமல், ஆரம்ப நிலையிலேயே கண்காணித்து போலீஸ் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதேவேளை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்புத் துறையின் மாவட்ட அதிகாரிகள், பிரச்சினை ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதைவிட, சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் விவகாரங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பல்வேறு இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வும் ஒற்றுமையும் பேராக் மாநிலத்தின் பலம் என்றும், அதனை எந்தத் தரப்பினரும் சீர்குலைக்கக்கூடாது. ஒற்றுமையை வலியுறுத்துதே இந்நிகழ்வின் தலையாய நோக்கமாகும் என்றும் டத்தோ அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு ஏஜென்சிகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட இந்த ஃபெஸ்டிவல் ஐடியா நிகழ்ச்சியை பேராக் மாநிலத்தின் ஏனைய 12 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் பல்வேறு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை உணர்வை மேலும் வலுப்படுத்த முடியும் என்று பேரா மாநிலத்தில் ஒற்றுமைத்துறைக்கு தலைமையேற்றுள்ள டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டெங்கில் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 மோட்டார் குண்டுகள் வெடிக்கச் செய்து அழிப்பு

டெங்கில் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 மோட்டார் குண்டுகள் வெடிக்கச் செய்து அழிப்பு

மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்: மரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் இருவர் காயம்

மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்: மரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் இருவர் காயம்

இளைஞர்களுக்கான சிறப்பு நிதி: 2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்- அன்வார் கோடி காட்டினார்

இளைஞர்களுக்கான சிறப்பு நிதி: 2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்- அன்வார் கோடி காட்டினார்

நேபாள பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம்: குடும்பங்களுக்கு நிதிச் சுமையிலிருந்து உடனடி நிவாரணம் தேவை

நேபாள பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம்: குடும்பங்களுக்கு நிதிச் சுமையிலிருந்து உடனடி நிவாரணம் தேவை

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி மரணம்: குடும்பம் அரசுக்கு எதிராக வழக்கு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி மரணம்: குடும்பம் அரசுக்கு எதிராக வழக்கு

இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் திறனை வளர்த்துக் கொள்ள தேவையானவறற்றைச் செய்வேன்- இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் திறனை வளர்த்துக் கொள்ள தேவையானவறற்றைச் செய்வேன்- இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ